புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 நவம்பர் 2021 (12:35 IST)

சுப்மன் கில் அரைசதம்: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!

சுப்மன் கில் அரைசதம்: இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது கான்பூரில் நடைபெற்று வருகிறது என்பதும் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்றைய போட்டியில் இந்திய அணி தற்போது வரை இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது. தொடக்க ஆட்டக்காரராக மயங்க் அகர்வால் 13 ரன்களிலும் சுப்மன் கில் 52 ரன்களிலும் அவுட் ஆகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
தற்போது கேப்டன் ரகானே மற்றும் புஜாரே ஆகிய இருவரும் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி சற்று முன் வரை 34 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியின் ஜேமிசன் மிக அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்