விக்ரம் பிளாக்பஸ்டர் வெற்றி… உற்சாகத்தில் கமல் செய்த அதிரடி மாற்றம்!
கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து கமல் நடிக்கும் அடுத்த படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இதையடுத்து அந்த படத்தை விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் மகேஷ் நாராயணன் இயக்க உள்ளார். இதை கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மகேஷ் நாராயணன் c u soon மற்றும் மாலிக் ஆகிய படங்களின் மூலமாக வெற்றிகரமான இயக்குனராக அறியப்படுபவர்.
இந்நிலையில் விக்ரம் திரைப்படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றியால் உற்சாக மிகுதியில் இருக்கும் கமல் தற்போது அதிரடியாக மாற்றம் ஒன்றை செய்துள்ளார். அதன்படி ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தை டிடிகே சாலையில் உள்ள தனது வேறு கட்டிடத்துக்கு மாற்றியுள்ளாராம். மிக அதீத நவீன வசதிகளோடு அந்த அலுவலகம் இயங்குவதாக சொல்லப்படுகிறது.