குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
இதனை அடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரெளபதி முர்மு அவர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திரெளபதி முர்மு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது