இரு இன்னிங்ஸிலும் பூஜ்யம் – தன்னைத் தானே கிண்டல் செய்த சேவாக் !

Last Modified செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (15:39 IST)
2011 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆனதை நினைவு கூறும் வகையில் சேவாக் ஒரு டிவிட் செய்துள்ளார்.

2011 ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி 4-0 என்ற கணக்கில் மண்ணைக் கவ்வியது. அப்போதே இந்திய அணியின் டெஸ்ட் வீழ்ச்சி தொடங்கியது. அதன் பின் கோஹ்லி தலைமையேற்ற பின்னர்தான் மீண்டும் இந்திய அணி ஏறுமுகத்தில் பயணம் செய்தது.

அந்த தொடர் முடிந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் அதுகுறித்து ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளார் விரேந்திர சேவாக். அந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடாத சேவாக் மூன்றாவது டெஸ்ட்டில் களமிறங்கினார். ஆனால் இரு இன்னிங்ஸிலும் டக் அவுட் ஆகி அனைவரையும் ஏமாற்றினார். அந்த போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது.

தனது டக் அவுட்களைக் கேலி செய்யும் விதமாக ‘“இதே நாள்.. 8 ஆண்டுகளுக்கு முன்பாக பரிங்ஹாமில் இரு இன்னிங்ஸ்களிலும் நான் டக் அவுட் ஆனேன். இங்கிலாந்துக்கு வர 2 நாட்கள்,மற்றும் 188 ஓவர்கள் பீல்ட். இதனால் அதிருப்தியடைந்த நான் ஆர்யபட்டாவுக்கு அர்ப்பணம் செய்ய வேண்டியதாயிற்று (பூஜ்ஜியம்)’ எனக் கேலியாகக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :