வேறுமத ஆணைக் காதலித்த பெண்… எதிர்க்காத குடும்பம் – சகோதரன் செய்த கொடூர செயல் !

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (11:04 IST)
தனது தங்கை வேறு மதத்தை சார்ந்த ஆணைக் காதலித்ததாலும் அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவிக்காததாலும் கோபமடைந்த இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தையே பெட்ரோல் குண்டு வீசி படுகொலை செய்துள்ளார்.

இங்கிலாந்து நாட்டின் யார்க்‌ஷயர் மாகாணத்தில் ஹடர்ஸ்ஃபீல்டு எனும். பகுதியில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஷாகித் முகமத் என்ற இளைஞன் தனது குடும்பத்தோடு வசித்து வந்துள்ளார். இவரது குடும்பம் தாத்தா பாட்டி அனைவரும் சேர்ந்த கூட்டுக் குடும்பம். இவரின் தங்கை ஒருவர் வேறுமதத்தைச் சேர்ந்த ஆண் ஒருவரை காதலித்ததால் அறிந்து முகமத் கோபம் அடைந்துள்ளார். ஆனால் அவரது குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் காதலுக்கு ஆதரவு தந்துள்ளனர்.

இதனால் அனைவர் மேலும் கடும் கோபமடைந்த முகமத் இரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது பெட்ரோல் குண்டுகளை வீட்டிற்குள் வீசியுள்ளார். பின்னர் தீக்குச்சிகளைக் கொளுத்தி வீட்டினுள் போட்டுள்ளார்.. இதனால் பற்றி எரிந்த அந்த வீட்டில் உள்ள குழந்தைகள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் வயதான பாட்டி ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி சில நாட்களில்  உயிரிழந்தார். இதனையடுத்து முகமத் மீது கொலைக் குற்றம் சாட்டி வழக்கை விசாரிக்க பாகிஸ்தான் அரசு தாமதப்படுத்த ஒருவழியாக இப்போது தீர்ப்பு வந்துள்ளது. இங்கிலாந்து நீதிமன்றம் 23 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.இதில் மேலும் படிக்கவும் :