வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (08:39 IST)

அமெரிக்கா, இங்கிலாந்து சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி – எதற்குத் தெரியுமா ?

தமிழகத்திற்குத் தொழில் முனைவோரை ஈர்க்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் இரண்டாவது உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் நடத்தப்பட்டது.  இந்த மாநாடு மூலம் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் தொழில் முதலீடு தமிழகத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும் முதலீடுகளை ஈர்க்க யாதும் ஊரே என்ற இணையதளம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ள தொழில் முனைவோரைக் கவர்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 14 நாட்கள் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இந்தப் பயணத்தில் தமிழகத்தில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலதிபர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி முதலீடுகளை ஈர்க்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தப் பயணத்தில் சில அமைச்சர்களும் அதிகாரிகளும் முதல்வருடன் செல்லவுள்ளனர். இதனால் தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.