செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 1 ஜூலை 2021 (19:51 IST)

4 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விம்பிள்டனில் சானியா மிர்ஸா: முதல் போட்டியில் வெற்றி!

தற்போது விம்பிள்டன் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் டென்னிஸ் ரசிகர்களுக்கு இந்த போட்டிகள் மிகப்பெரிய விருந்தாக இருக்கிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 4 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் விம்பிள்டனில் களமிறங்கியுள்ளார். முதல் சுற்றில் பெத்தனி மேட்டக் சாண்ட்ஸ் உடன் இணைந்து உலக தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருக்கும் டெசிரே க்ரவ்கிஸ் மற்றும் அலெக்ஸா குவார்சசி ஜோடியை வென்றுள்ளனர்
 
பெண்கள் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சாவின் ஜோடி விம்பிள்டன் முதல் போட்டியில் வென்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நான்கு ஆண்டுகளின் பின் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா முதல் போட்டியில் வெற்றி பெற்றிருப்பது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது