வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 ஜூன் 2021 (10:00 IST)

என்னடா இது.. விம்பிள்டனுக்கு வந்த சோதனை? – மற்றொரு வீராங்கனை விலகல்!

இந்த மாத இறுதியில் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் முக்கியமான டென்னிஸ் வீரர்கள் போட்டியிலிருந்து விலகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக பிரபலமான விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் இந்த மாதம் ஜூன் 28ம் தேதி தொடங்குகின்றன. பல நாட்டு டென்னிஸ் வீரர்கள், வீராங்கனைகளும் இந்த போட்டியில் பங்கேற்கின்றனர். இந்நிலையில் முன்னதாக டென்னிஸ் சாம்பியனான ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் விம்பிள்டன் மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த அதிர்ச்சியிலிருந்து டென்னிஸ் ரசிகர்கள் மீள்வதற்கு பிரபல ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா விம்பிள்டன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாக அறிவித்துள்ளார்.