வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 ஜூன் 2021 (21:59 IST)

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் கிரெஞ்சிகோவா சாம்பியன் பட்டம்!

பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டியில் இன்று அனஸ்தசியா பாவ்லியூசெங்கோவாவை செக் குடியரசை சேர்ந்த பார்போரா  கிரெஞ்சிகோவா எதிர்கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார்.

இப்போட்டியில், அனஸ்தசியா செங்கோவாவை 6-1,2-6,6-4 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பார்போரா கிரெஞ்சிகோவா சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவில் பார்போரா தனது முதல் கிராண்ட்ஸாம் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
 அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.