1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Updated : புதன், 15 பிப்ரவரி 2023 (12:21 IST)

மகளிர் ஐபிஎல் போட்டி: பெங்களூரு அணியில் இணைந்த சானியா மிர்சா..!

sania
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டியில் நடைபெற உள்ளது என்பதும் ஐந்து அணிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என்பதும் 90 வீராங்கனைகளின் ஏலம் சமீபத்தில் நடைபெற்றது என்பதையும் பார்த்தோம்.
 
இந்த நிலையில் பிசிசிஐ நேற்று மகளிர் ஐபிஎல் போட்டி காண அட்டவணையை வெளியிட்ட நிலையில் மார்ச் 5ஆம் தேதி போட்டிகள் தொடங்க உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் மகளிர் ஐபிஎல் தொடரில் விளையாடும் 5 அணிகளில் ஒன்றான பெங்களூரு அணியின் வழிகாட்டியாக பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து பெங்களூர் அணியின் ட்விட்டர் பக்கத்தில் கூறிய போது பெண்கள் விளையாட்டுக்கு வழிகாட்டியாக இருந்து வரும் சானியா மிர்சா அவர்கள் பெங்களூர் அணி நாட்டு வழி நடத்துவார் என்றும் இதை அறிவிப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றும் தெரிவித்துள்ளது. 
 
சானியா மிர்சா இது குறித்து கூறியபோது பெண்கள் அனைத்து துறைகளிலும் குறிப்பாக விளையாட்டு துறையில் முன்னேற முடியும் என்றும் பெங்களூர் அணிக்கு என்னால் முடிந்த வழிகாட்டியாக செயல்படுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran