வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (17:21 IST)

மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது.: பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்..!

bisma
மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது.: பாகிஸ்தான் கேப்டன் ஆதங்கம்..!
மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட ஆசையாக உள்ளது என்றும் ஆனால் அது அப்படித்தான் என்றும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மரூப் ஆதங்கத்துடன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். 
 
மகளிர் ஐபிஎல் போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில் இதில் பல நாடுகளில் உள்ள வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் ஆண்கள் ஐபிஎல் போலவே பெண்கள் ஐபிஎல் போட்டியிலும் பாகிஸ்தான் வீராங்கனைகள் தேர்வு செய்யப்படவில்லை. 
 
இதனை அடுத்து பேட்டி அளித்த பாகிஸ்தான் கேப்டன் மகளிர் அணி கேப்டன் பிஸ்மா, ‘மகளிர் ஐபிஎல் போட்டிகளில் விளையாட பாகிஸ்தான் வீராங்கனைகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காதது துரதிஷ்டவசமானது என்றும் மகளிர் ஐபிஎல் போட்டியில் விளையாட எங்களுக்கும் ஆசை உண்டு என்று தெரிவித்தார் 
 
ஆனால் அது எங்கள் கையில் இல்லை என்றும் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Mahendran