வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2023 (14:53 IST)

மகளிர் ஐபிஎல்.. இரண்டு தமிழக வீராங்கனைகள் மட்டுமே ஏலம்..!

women ipl
இந்த ஆண்டு முதல் மகளிர் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் சமீபத்தில் வீராங்கனைகளின் ஏலம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த ஏலத்தில் 9 தமிழக வீராங்கனைகள் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளதாக தகவல்களில் உள்ளன. 
 
தமிழகத்தை சேர்ந்த அபர்ணா என்பவரை டெல்லி அணி 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது. அதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமலதாவை ரூபாய் 30 லட்சத்துக்கு குஜராத் அணி ஏலம் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஹேமலதா இந்திய அணிக்காக 9 ஒரு நாள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சார்பாக 9 வீராங்கனைகள் ஏலத்தில் பங்கேற்ற நிலையில் 2 வீராங்கனைகள் மட்டுமே ஏலம் போய் உள்ளது அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது
 
அதிகபட்சமாக ரயில்வே அணியில் இருந்து 10 வீராங்கனைகள் ஏலத்தில் தேர்வு பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran