வியாழன், 8 ஜனவரி 2026
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (09:00 IST)

நேற்றைய போட்டியில் சாம் கரன் படைத்த சாதனை!

நேற்றைய போட்டியில் சாம் கரன் படைத்த சாதனை!
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சாம் கரன் இந்திய வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார்.

நேற்று புனேவில் நடந்த வாழ்வா சாவா போட்டியில் கடைசிநேரத்தில் த்ரில் வெற்றி பெற்றது இந்தியா. இதன் மூலம் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிக்குப் பின் ஆட்டநாயகன் விருது 95 ரன்கள் சேர்த்த சாம் கரனுக்கும், தொடர்நாயகன் விருது ஜானி பேர்ஸ்டோவுக்கும் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் 8 ஆவது வீரராகக் களமிறங்கிய சாம் கரன் கடைசி வரை போராடி இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்ய முடியாத நிலையில் வைத்திருந்தார்.

இந்நிலையில் 8 ஆவது வீரராக ஒருநாள் போட்டிகளில் களமிறங்கிய அதிகரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை அவர் நேற்று நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னர் இங்கிலாந்தின் கிரிஸ் வோக்ஸ் 92 ரன்கள் சேர்த்து அந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.