செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 26 அக்டோபர் 2020 (17:43 IST)

தோனியின் மனைவியிடம் முத்தம் பெறும் இந்த சிஎஸ்கே வீரர் யார்?

தோனியின் மனைவியிடம் முத்தம் பெறும் இந்த சிஎஸ்கே வீரர் யார்?
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியின் பந்து வீச்சாளர்களில் ஒருவரான மோனுகுமார் முதல் முறையாக களமிறங்கினார்
 
கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர் அணியில் இருந்தும் நேற்று தான் அவருக்கு முதல் முறையாக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் இரண்டு ஓவர்கள் மட்டுமே வீசினார் என்பதும் அதில் அவர் 20 ரன்கள் கொடுத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
தோனியின் சொந்த ஊரான ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நகரத்தைச் சேர்ந்த ,மோனுகுமார் தோனியின் நெருங்கிய நண்பர் மட்டுமின்றி அவரது குடும்ப நண்பராகவும் இருந்து வருகிறார். இந்த நிலையில் மோனுகுமார் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் தேடிய போது சாக்ஸிதோனியிடம் அவர் முத்தம் பெறும் புகைப்படம் ஒன்றை கண்டுபிடித்தனர். 
 
மோனுகுமார் தனது குடும்பத்துக்கு நெருக்கமான நண்பர் என்பதால் அவருக்கு சாக்சிதோனி அன்புடன் கொடுத்த முத்தம் தான் இந்த புகைப்படம் என்பதும் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது