புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 30 செப்டம்பர் 2020 (17:29 IST)

சினிமாவில் குதிக்கின்றார் தோனி: சாக்சி தோனி தகவல்

தல தோனி சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்தார் என்பது தெரிந்ததே. இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உலக அளவில் டிரெண்ட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பின் தற்போது ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி அனேகமாக இந்த ஐபிஎல் தொடருடன் ஐபிஎல் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இந்த நிலையில் தற்போது கிரிக்கெட்டை அடுத்து சினிமாவில் குதிக்க தோனி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. தோனி என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ள தோனியின் மனைவி சாக்சி தோனி, அந்த நிறுவனத்தின் மேனேஜிங் டைரக்டர் ஆகவும் உள்ளார் 
 
இந்த நிறுவனம் தற்போது டாக்குமென்டரி சினிமாக்களை தயாரித்து வருவதாகவும் விரைவில் வெப்தொடர்களை தயாரிக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 5 வெப் தொடர்களை தங்களது நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் அதில் ஒரு தொடர் விஞ்ஞானம் சம்பந்தப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தத் தொடரில் தோனியும் நடிப்பாரா என்பது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்