1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 14 அக்டோபர் 2020 (16:35 IST)

ஸ்பைடர் மேனுக்கு முத்தம் கொடுத்த பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படம்!

நடிகை பிரியானி பவானி சங்கர் ஸ்படைர் மேன் சிலைக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்களுக்கு செய்தி வாசிப்பவராக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரை தொடரில் நடித்து பிரபலமானார் பிரியா பவானி சங்கர். ஒரு காலத்தில் சின்னத்திரை நடிகைகள் சினிமாவுக்குள் நுழைவது கடினமாக இருந்த நிலையில் அதை பொய்யாக்கும் விதமாக சினிமாவிலும் நுழைந்து வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் அவர் இப்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ஸ்பைடர் மேன் படத்தில் அவர் தன் காதலிக்கு தலைகீழாக தொங்கிய படி முத்தம் கொடுக்கும் காட்சி வெகு பிரபலம். அந்த வகையில் ஸ்பைடர் மேன் தலைகீழாக தொங்குவது போன்ற சிலை ஒன்று அமெரிக்காவில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லும் நபர்கள் ஸ்பைடர் மேனுக்கு முத்தம் கொடுப்பது போல புகைப்படம் எடுத்துகொள்வது வழக்கம், அந்த வகையில் இப்போது பிரியா பவானி சங்கரும் அது போல புகைப்படம் எடுத்து அதை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.