தோனி இப்படி செய்வார்னு நான் நினைக்கவே இல்ல – சச்சின் வருத்தம்

sachin
Last Modified ஞாயிறு, 23 ஜூன் 2019 (09:14 IST)
நேற்று நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியோடு மோதிய இந்தியா நூலிழையில் வெற்றி பெற்றது. இது குறித்து இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடவில்லை என சச்சின் தெரிவித்துள்ளார்.

நேற்று டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தது. ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது. கேதர் ஜாதவ்- தோனி பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடியும் அதிக ரன்களை பெற முடியவில்லை. பல பேருக்கு ஸ்டம்பவுட் கொடுத்தவர் தோனி. ரன்கள் எடுக்க தோனி ஓடும்போது அவருக்கே ஸ்டம்பவுட் கொடுத்தது ஆப்கானிஸ்தான். கடைசியாக 224 ரன்களே எடுத்திருந்த நிலையில், பந்து வீச்சில் சீரான கவனம் செலுத்தி ஆப்கானிஸ்தானை ரன்கள் எடுக்கவிடாமல் செய்தது இந்தியா. கடைசி ஓவர்களில் வரிசையாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆப்கனை வென்றது இந்தியா. கொஞ்சம் தப்பியிருந்தாலும் ஆப்கானிச்தானிடம் இந்தியா தோற்றிருக்கும்.

இதுகுறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் “ஜாதவ்- தோனி பார்ட்னர்ஷிப் சரியாக எடுபடவில்லை. தோனி பழையமாதிரி சிறப்பான ஆட்டத்தை தரவில்லை.” என்று கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானை குறைத்து மதிப்பிட்டுவிட்டது இந்தியா என ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :