1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Bumrah might not be a part of oval test

ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா இல்லையா?.. கடைசி நேரத்தில் அதிர்ச்சி செய்தி!

பும்ரா
இந்திய அணியின் நட்சத்திர வீரரான பும்ரா, பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக உள்ளார். ஆனால் அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் மற்றும் முதுகுவலிப் பிரச்சனைகள் காரணமாக அவரால் தொடர்ந்து போட்டிகளில் விளையாட முடியவில்லை. அவரது காயங்களுக்குக் காரணம் அவரின் தனித்துவமான பந்து வீசும்முறைதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் அவர் அடிக்கடிக் காயங்களுக்கு ஆளாகி சர்வதேசப் போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாட முடியாமல் அவதிப்படுகிறார். இதனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் ‘ஆண்டர்சன் –சச்சின்’ தொடரில் அவர் மூன்று போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என முன்பே அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்திய அணி தொடரை இழக்காமல் இருக்க ஐந்தாவது போட்டியை வென்றே ஆகவேண்டும்.

அதனால் பும்ரா ஓவல் டெஸ்ட்டில் விளையாடுவார் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது கடைசி நேரத்தில் பும்ரா இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் கசிந்துள்ளது. இதனால் இந்திய அணிக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
கம்பீரைத் தூக்கினால் விராட் கோலி மீண்டும் வருவார்… யோக்ராஜ் சிங் கருத்து!