1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 22 ஜூன் 2019 (20:43 IST)

ஆப்பு வைக்குமா ஆப்கானிஸ்தான்? - 225 ரன்கள் இலக்கு

இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையே நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியில் பேட்டிங் செய்த இந்தியா 224 ரன்களை மட்டுமே பெற்றுள்ளது. 225 ரன்களை இலக்காக வைத்து களத்தில் இறங்குகிறது ஆப்கானிஸ்தான்.

நடந்து வரும் உலக கோப்பை போட்டியின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆப்கானிஸ்தான் அணிகள் ஆடிக்கொண்டிருக்கின்றன. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்து விளையாட தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே தொடக்க பேட்ஸ்மேனும், இந்திய அணியின் நட்சத்திர வீரருமான ரோஹித் ஷர்மா 1 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தொடர்ந்து விளையாடிய கேப்டன் கொஹ்லி அரை சதம் எடுத்து கொஞ்சம் ஆறுதல் அளித்தார். அடுத்து விளையாடிய விஜய் ஷங்கர், தோனியால் கூட ஆப்கானிஸ்தானின் சுழல் பந்துகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. கேதர் ஜாதவ் ஓரளவு சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். ஆனாலும் இன்று இவ்வளவு மோசமான ஆட்டத்தை இந்தியாவிடமிருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

50 ஓவர்கள் விளையாடிய இந்தியா ஒரே ஒரு முறை மட்டுமே சிக்சர் அடித்துள்ளது. அதுவும் கேதர் ஜாதவ் அடித்த சிக்ஸர். தற்போது 225 ரன்களை இலக்காக கொண்டு களம் இறங்கியிருக்கிறது ஆப்கானிஸ்தான். இதுவரை ஒருமுறை கூட வெற்றிபெறாத ஆப்கானிஸ்தான் தோல்வி முகமே காணாத இந்தியாவை தோற்கடித்து விடுமோ என கலக்கத்தில் உள்ளனர் ரசிகர்கள்.