1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (19:02 IST)

கொரோனா வைரஸால் தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்

கொரோனா வைரஸால் தள்ளிபோனது கிரிக்கெட் வீராங்கனையின் ஓரினத் திருமணம்
தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை லைசஸ் லீ என்பவர் தனது தோழியை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார் என்பது தெரிந்ததே. ஓரின சேரிக்கை திருமணம் என்றாலும் இருவரும் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இருதரப்பு பெற்றோர்களும் இந்த திருமணத்திற்கு அனுமதி கொடுத்ததை அடுத்து திருமண தேதி ஏப்ரல் 10 எனவும் முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தன 
 
இந்த நிலையில் திடீரென கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் தாக்கி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவிலும் நுழைந்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை அடுத்து வீராங்கனை லைசஸ் லீ தனது திருமணத்தை தள்ளி வைத்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் புதிய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
தென் ஆப்பிரிக்காவில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஓரினத் திருமணம் அங்கீகரிக்கப்பட்ட நிலையில் லைசஸ் லீ  திருமணத்தில் ஏராளமானோர் கலந்து கொள்ள முடிவு செய்திருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருமணம் தற்போது தடைபட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது