பிரபல கிரிக்கெட் வீராங்கனைக்கு ஒரு ஆண்டு தடை: இன்ஸ்டாகிராம் காரணமா?

Last Modified திங்கள், 18 நவம்பர் 2019 (22:56 IST)
பிரபல ஆஸ்திரேலிய வீராங்கனை ஒருவர் தனது அணி குறித்த விவரங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட காரணத்தினால் அவருக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை எமிலி ஸ்மித். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அணி குறித்த விபரங்களை வெளியிட்டதற்காக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு ஆண்டு விளையாட தடை விதித்துள்ளது

ஆஸ்திரேலியா பெண்கள் கிரிக்கெட் அணி தற்போது பிக்பேஷ் லீக் தொடர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ஹரிக்கேஷ் அணிக்காக விளையாடும் விக்கெட் கீப்பர் எமிலி ஸ்மித் என்ற 24 வயது வீராங்கனை, சிட்னி அணிக்கு எதிராக களமிறங்கும் முன்பாகவே அணியின் விவரங்களை பட்டியலிட்டு தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைப்பக்கத்தில் வெளியிட்டார்
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஊழல் தடுப்பு விதிகளின்படி இது குற்றம் என்று எமிலிக்கு ஓராண்டு தடை விதித்தனர். இருப்பினும் இந்த தடையை 9 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் முக்கிய சில போட்டிகளில் விளையாட அவர் அனுமதிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :