வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:46 IST)

உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி ஒத்திவைப்பு: ஃபிபா அறிவிப்பு!

கால்பந்து போட்டிகளில் மிகவும் பிரபலமான ஃபிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியாவில் நடக்கவிருந்த நிலையில் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

உலகளவில் மிகவும் பிரபலமான ஃபிபா உலகக்கோப்பை பெண்கள் கால்பந்து போட்டி எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்து. நவம்பர் 2 தொடங்கி 20 வரை இந்தியாவின் முக்கியமான 5 நகரங்களில் இந்த போட்டி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பால் அனைத்து உலகளாவிய போட்டிகளும் ரத்து செய்யப்பட்டு வரும் சூழலில்,  உலகக்கோப்பை கால்பந்து போட்டியும் ஒத்திவைக்கப்படுவதாக ஃபிபா அறிவித்துள்ளது. போட்டி மீண்டும் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.