செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 ஏப்ரல் 2020 (08:31 IST)

அப்போ இல்ல… இப்போ இல்ல… எப்பவுமே டெஸ்ட்தான் – கோலி சொன்ன ரகசியம் !

கோலி தனக்கு எப்போதுமே பிடித்த போட்டி என்றால் அது டெஸ்ட் போட்டிகள்தான் எனக் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே முடங்கியுள்ள நிலையில் நாடு நாடாக சுற்றி வந்த கிரிக்கெட் வீரர்களும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் ரசிகர்களோடு தொடர்ந்து தொடர்பில் இருக்க சமூகவலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இதையடுத்து கிரிக்கெட் வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக இங்கிலாந்து முன்னாள் வீரர் பீட்டர்சன் இந்திய கேப்டன் கோலியை இன்ஸ்டாகிராமில் பேட்டி எடுத்தார். அப்போது கோலிக்கு பிடித்த கிரிக்கெட் வடிவம் எது என்று கேட்டபோது ‘எப்போதும் பிடித்தது டெஸ்ட் பார்மட்தான். அதை நான் பலமுறை சொல்லியுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கிறது. என்னை ஒரு சிறந்த மனிதனாக்கியது டெஸ்ட் கிரிக்கெட்தான்’ எனக் கூறியுள்ளார்.