வியாழன், 2 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 3 மே 2019 (21:44 IST)

184 ரன்கள் இலக்கு கொடுத்த பஞ்சாப்: சாதிக்குமா கொல்கத்தா

இன்று நடைபெற்று வரும் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா இடையே நடைபெற்று வரும் முக்கிய் லீக் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் பூரன் 48 ரன்களும், மயாங்க் அகர்வால் 36 ரன்களும், கர்ரன் 55 ரன்களும், மந்தீப் சிங் 25 ரன்களும் எடுத்துள்ளனர். கடைசி ஓவரில் மட்டும் 22 ரன்கள் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
 கொல்கத்தா பந்துவீச்சாளர்களான சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுக்களையும், கர்னே, ரஸல் ம்ற்றும் ராணா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். மயாங்க் அகர்வால் விக்கெட் ரன் அவுட் முறையில் அவுட் செய்யப்பட்டது
 
 இந்த நிலையில் இன்னும் சில நிமிடங்களில் 184 ரன்கள் என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி பேட்டிங் செய்யவுள்ளது. கில், லின், ரஸல், தினேஷ் கார்த்திக், சுனில் நரேன், ராபின் உத்தப்பா, ரானா என நீண்ட பேட்டிங் வரிசை கொண்ட கொல்கத்தா அணி இந்த இலக்கை எட்டி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை பெறுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்