நேற்று நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணியின் போட்டியில் ஏகப்பட்ட சுவாரஸ்யமான விஷயங்கள் இருந்தாலும், அதிகம் பேசப்படுவது தோனி செய்யும் சம்பவங்கள்தான்.
40 வயதிற்கு மேலும் கிரிக்கெட் விளையாடி வந்தாலும் அந்த சுறுசுறுப்பு வேகம் கொஞ்சம் கூட குறையவில்லை என்பதற்கு நேற்று தோனி எடுத்த விக்கெட்டே உதாரணம். பேட்டிங் தவிர்த்து தோனி மிகச்சிறந்த விக்கெட் கீப்பர் என்பதும் பலர் அறிந்த விஷயம்தான்.
நேற்று மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் செய்தபோது தோனி விக்கெட் கீப்பிங் செய்துக் கொண்டிருந்தார். சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்துக் கொண்டிருந்தபோது வீசப்பட்ட பந்து பேட்ஸ்மேனை தாண்டி சென்ற நிலையில், தோனி அதை பிடிக்க முயன்றார். ஆனால் பந்து அவரை தாண்டி பவுண்டரி லைன் சென்றதால் மும்பை அணிக்கு 4 ரன்கள் கிடைத்தது. தோனி பந்தை மிஸ் செய்தது பலருக்கு அதிர்ச்சி அளித்தது. தோனிக்கே அது அதிர்ச்சியாக இருந்திருக்கலாம்.
அடுத்த சில பந்துகளிலேயே ஆட்டத்தில் தீவிர கவனம் செலுத்திய தோனி, சூர்யகுமார் யாதவ் பந்தை அடிக்க முயன்று மிஸ் ஆகி ரீச்சை விட்டு வெளியே சென்றபோது. அந்த மைக்ரோ விநாடிக்குள் பந்தை பிடித்து ஸ்டம்ப்பில் அடித்து அவுட் செய்தார். கண் இமைப்பதற்குள் விக்கெட் விழுந்ததை நம்ப முடியாமல் சூர்யகுமார் யாதவ் அதிர்ச்சியாக பார்க்க, தோனி தனது கேஷுவலான லுக்கோடு கடந்து சென்றார். இந்த வீடியோதான் தற்போது வேகமாக வைரலாகி வருகிறது.
முன்பு ஒருமுறை ஷ்ரேயாஸ் ஐயர், தோனியால் ஸ்டம்ப் அவுட் செய்யப்பட்டபோது “நான் இதுவரை ஸ்டம்ப் அவுட் ஆனதே இல்லை. ஆனால் இப்படி ஒரு ஸ்டம்ப் அவுட் ஆவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை” என அதிர்ச்சியாக சொன்னார். அப்படியான அதிர்ச்சியை நேற்று சூர்யகுமார் யாதவ்வும் எதிர்கொண்டிருப்பார் என தெரிகிறது.
Edit by Prasanth.K
0.12 seconds – thats all Mahi needed to silence the haters! ????#CSKvsMIpic.twitter.com/m1xFZPd6DD
— AKA Tharun (@mech_bug) March 23, 2025