செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 18 ஜூன் 2021 (08:47 IST)

இந்தியாவில் சட்டப்பாதுகாப்பை இழந்த டிவிட்டர் நிறுவனம்!

இந்திய ஒன்றிய அரசின் புதிய விதிகளை ஏற்க மறுத்த டிவிட்டர் நிறுவனம் சட்டப்பாதுகாப்பை இழந்துள்ளது.

சமூகவலைதளங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கும் விதமாக ஒன்றிய அரசு, சில திருத்த விதிகளைக் கொண்டு வந்தது. அதைப் பின்பற்ற டிவிட்டர் நிறுவனத்துக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டபோதும், அதை பின்பற்றவில்லை முடியாது என்ற முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் டிவிட்டர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டு வந்த சட்டப்பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு பயனாளர் எவரேனும் ட்விட்டரில் சட்டவிரோத மற்றும் ஆட்சேபத்திற்குரிய பதிவைப் பகிர்ந்தால் கூட ட்விட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பலர் அதற்கான பொறுப்பை ஏற்க நேரிடும் என சொல்லப்படுகிறது.