வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Updated : சனி, 14 டிசம்பர் 2019 (13:38 IST)

”டி20-ல் மீண்டும் களமிறங்குவேன்”.. முடிவெடுத்த பிராவோ

டி20 போட்டிகளில் மீண்டும் விளையாட உள்ளதாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் வீரர் பிராவோ விருப்பம் தெரிவித்துள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பிராவோ, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார்.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து, அணியின் கேப்டனாக பொல்லார்ட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பிராவோ வெஸ்ட் இண்டீஸ் அணியில் விளையாட உள்ளதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிராவோ, “ நான் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக டி20 போட்டிகளில் களமிறங்க உள்ளேன். ஏனென்றால் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்வாகத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.என்னால் டி20 போட்டிகளில் சிறப்பாக பங்களிப்பை அளிக்க முடியும் என நம்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

மேலும், ”சரியான திட்டமிடல் இருந்தால், மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணி உலகிலேயே சிறந்த அணியாக மாறும், தற்போது டி20 தர வரிசையில் அணியை முன்னேற்றுவதே முதல் நோக்கம்” எனவும் பிராவோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.