செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: புதன், 11 டிசம்பர் 2019 (09:17 IST)

டி20 தொடரை இந்தியா வெல்லுமா??

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான மூன்றாவது கடைசி டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்தியாவில் வெஸ்ட் இண்டீஸ் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இது வரை நடந்த 2 போட்டிகளிலும் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த தொடரின் கடைசி டி20 போட்டி இன்று மாலை 7 மணிக்கு மும்பை வாங்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடரின் கோப்பையை எந்த அணி கைப்பற்றப்போகிறது என பொறுத்திருந்து பார்க்கலாம்.