என்னுடைய கார்டை தேடி கண்டுபிடிக்கவே 5 நிமிடம் ஆனது; சூப்பர் ஓவருக்கு முன் நடந்த குளறுபடி !

Last Modified வியாழன், 30 ஜனவரி 2020 (12:52 IST)
நேற்றைய போட்டியில் சூப்பர் ஒவரில் கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து வெற்றி பெற வைத்த ரோஹித் ஷர்மா ஒரு சுவாரஸ்யமான தகவலை சொல்லியுள்ளார்.

நேற்றைய போட்டியின் ஹீரோ ரோஹித் ஷர்மா சூப்பர் ஓவருக்கு தான் எவ்வாறு தயார் ஆனேன் என்பதைப் பற்றி சுவாரஸ்யமான தகவல் ஒன்றை சொல்லியுள்ளார். அதில் ‘நான் நியுசிலாந்து இந்த போட்டியை எளிதாக வென்றுவிடும் என நினைத்தேன். அதனால் எனது கிட் பேக்கை மூட்டை கட்டி வைத்துவிட்டேன். ஆனால் எதிர்பாராத விதமாக சூப்பர் ஓவர் வந்துவிட்டது.

அதற்கு தயாராவதற்காக எனது கிட் பேக்கை துழாவினேன். ஆனால் எனது அப்டமன் கார்டைத் தேடி கண்டுபிடிக்கவே எனக்கு 5 நிமிடம் ஆகி விட்டது’ என நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :