1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Get Ration Card online for Rs 20

ரூ.20க்கு ஆன்லைன் மூலம் ரேஷன் கார்டு பெறலாம் !

online
இணையதளத்தில் ரூ.20 செலுத்தி விண்ணப்பித்தால் மாற்றும் ரேசன் கார்டு  பெற்றுக் கொள்ளும் வசதி தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ரேசன் கார்டுகள் ஸ்மார்டு கார்டுகளாக மாற்றப்பட்டு  தமிழகம் முழுவதும் ஸ்மார்ட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில் ரேசன் கார்டுகளில் பெயர், முகவரி போன்றவற்றை பிழை திருத்தம் செய்ய வேண்டியதிருந்தால்  மக்கள் www.tnpds.gov.in  என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்நிலையில் மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கும் வசதி இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
 
மேலும், கார்டு தேவைப்படுவோர் பொது விநியோகத் திட்ட இணையதளத்த்ல் நகல் கார்டுக்கு விண்ணபிக்க என்ற பகுதிக்குச் சென்று ஏற்கனவே கொடுத்துள்ள எண்ணைப்பதிவு செய்ய வேண்டும்.
 
அதன்பின் செல்போனுக்கு ஒரு ஓடிபி எண் வரும் அதைப் பயன்படுத்தி மாற்று கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் கார்டு தயார் ஆன பிறகு ரூ.20 செலுத்தி கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும் என அரசு தெரிவித்துள்ளது.
 
அடுத்த கட்டுரையில்
”கூட்டணி தர்மத்தினால் மௌனமாக இருக்கிறேன்” ஜெயக்குமார் மீது பொன்னார் ஆவேசம்