திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 24 ஜனவரி 2020 (09:27 IST)

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு: திருநெல்வேலி, தூத்துக்குடியில் தொடக்கம்

ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கைகள் எடுத்து வரும் நிலையில் தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்கள் வாங்கி கொள்வதற்கான திட்டத்தை தமிழக அரசு உருவாக்கியுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள ரேசன் அட்டைகள் சில ஆண்டுகளுக்கு முன்பு கணினி மயமாக்கப்பட்டன. மேலும் அவற்றுடன் ஆதார் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் ரேசனில் பொருட்கள் வாங்கியதும் அதன் விவரங்கள், விலைப்பட்டியல், பொருள் இருப்பு ஆகியவை குறுஞ்செய்தி மூலம் செல்போன் எண்களுக்கு வந்துவிடும். இந்நிலையில் ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் அடுத்தக்கட்டமாக தமிழகம் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை வாங்கி கொள்ளும் வசதியை தமிழக அரசு அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் முதற்கட்டமாக தற்போது தூத்துக்குடி மற்றும் திருநெல்வெலியில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள மக்கள் தங்கள் ரேசன் கார்டுகளை கொண்டு மாவட்டம் முழுதும் உள்ள எந்த ரேசன் கடைகளில் வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கி கொள்ளலாம். பரிச்சார்ந்த முயற்சியாக தொடங்கப்பட்ட உள்ள இதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு முழுமையாக மாநிலம் முழுவதும் செயல்பட இருப்பதாக கூறப்படுகிறது.