வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 7 டிசம்பர் 2022 (14:39 IST)

டாஸ் போட்டவுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய ரோஹித் சர்மா: என்ன காரணம்?

Rohit Sharma
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்று வரும் நிலையில் டாஸ் போட்டவுடன் காயம் காரணமாக ரோகித் சர்மா மைதானத்தை விட்டு வெளியேறினார்
 
தற்போது கேப்டன் பொறுப்பை விராத் கோஹ்லி கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது
 
சற்றுமுன் வரை அந்த அணி 40 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 168 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் உம்ரான் மாலிக் ஒரு விக்கெட்டையும் சிராஜ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி உள்ளனர். காயம் காரணமாக ரோகித் சர்மா பீல்டிங் செய்யாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva