1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 6 டிசம்பர் 2022 (18:57 IST)

852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் சஸ்பெண்ட்: அதிரடி நடவடிக்கை

tasmac
852 டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு மது பானங்களை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இதுகுறித்து அதிரடியாக ஆய்வு செய்யப்பட்டது 
இந்த ஆய்வில் மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் என மொத்தம் 852 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார் 
 
மேலும் ஆய்வு செய்யப்பட்டவர்களிடமிருந்து 4 கோடியே 60 லட்ச ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாகவும், கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்த மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran