புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (12:37 IST)

தோற்றும் வென்ற தோனி- ட்விட்டரில் வைரலாகும் தோனி ஹேஷ்டேகுகள்

நேற்று நடந்த உலக கோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்திடம் இந்தியா தோல்வியை தழுவியது. இதனால் இந்திய கிரிக்கெட் வீரர்களை ரசிகர்கள் திட்டி இணையதளங்களில் பதிவிட்டுள்ளனர். பலர் அவர்களது உருவ போஸ்டரை எரித்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். ஆனால் ஒரு கிரிக்கெட் வீரரை மட்டும் யாரும் ஒரு வார்த்தைக்கூட திட்டவில்லை. அவர்தான் மகேந்திரசிங் தோனி.

தோனி விளையாடும் கடைசி உலக கோப்பை இது என்பதால் எப்படியாவது இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என இந்திய அணியினரும், இந்திய ரசிகர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இருந்தார்கள். ஆனால் அரையிறுதியில் இந்திய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்தால் இந்தியா தோல்வியடைந்தது. அந்த நிலையிலும் ஏழாவதாக களம் இறங்கி தோனி 50 ரன்கள் வரை அடித்து சாதனை படைத்தார்.

அவர் திடீரென ரன் அவுட் ஆனதும் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்கு அழுகையே வந்துவிட்டது. அவரே கண்கலங்கிவிட்டார். அதனால் ரசிகர்கள் அவரது சாதனைகளை பட்டியலிட்டும், தோனி குறித்த நினைவுகளை பகிர்ந்தும் #ThankYouMSD #DhoniForever ஆகிய ஹேஷ்டேகுகளை ட்ரெண்டாக்கி வருகின்றனர். உலக கோப்பையில் இந்திய அணி தோற்றாலும் ரசிகர்கள் மனதை வென்றிருக்கிறார் தோனி.