புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜூலை 2019 (13:44 IST)

தோனியை எங்கள் அணியில் சேர்த்து கொள்ள தயாராய் இருக்கிறோம்- நியூசிலாந்து கேப்டனின் அதிரடி பதில்

நேற்றைய உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து இந்தியாவை வென்று இறுதிக்கு தேர்வானது. ஆட்டம் முடிந்ததும் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் “தோனி சிறப்பாக விளையாடக்கூடியவர். அவர் கேப்டனாய் இருந்தபோது இந்திய அணி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்றைய மற்றும் நேற்றைய ஆட்டத்திலும் அவரது பங்களிப்பு அபாரமாக இருந்தது. ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப்பில் அற்புதமாக விளையாடினார். தோனி ஒரு உலக லெவல் ஆட்டக்காரர்.” என்றார்.

மேலும் “தோனி இந்தியர் என்பதால் அவரை எங்களது அணியில் இணைத்து கொள்ள சாத்தியமில்லை. அவர் நியூஸிலாந்து குடிமகனாய் மாறிவிட்டால் கண்டிப்பாக அவரை எங்களது அணியில் இணைத்து கொள்வோம்” என பேசியுள்ளார்.

எதிரணி கேப்டனே தோனியை புகழ்ந்து பேசுவது ஒருவகையில் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தாலும், மறுபுறம் “தோனியை இந்தியாவை விட்டுவிட்டு வர சொல்லும் சூசகமான பேச்சு இது” என்று விமர்சனங்களும் எழுந்துள்ளன.