இரண்டாவது ஒருநாள் போட்டி – டாஸ் தோற்ற இந்தியா பேட்டிங் !

Last Modified புதன், 18 டிசம்பர் 2019 (14:27 IST)
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி சற்று முன்னர் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி சென்னையில் நடந்தது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இதையடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதில் டாஸ் ஜெயித்த வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கைத் தேர்வு செய்துள்ளது. களமிறங்கிய இந்திய அணி 12 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 65 ரன்கள் சேர்த்துள்ளது. ரோஹித் 25 ரன்களுடனும், ராகுல் 38 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :