திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: புதன், 18 டிசம்பர் 2019 (14:48 IST)

மரங்களுக்கு இடையே சிக்கிய குதிரை ... சாதுர்யமாக மீட்ட நபர் ... வைரல் வீடியோ

உலகில் எங்கு என்ன விஷயம் நடந்தாலும், இப்பொழுது உள்ள தொழில் நுட்பம் மற்றும் இணையதளங்களின் அசாதாரண வளர்ச்சியால் எளிதில் அறிந்து கொள்ள முடிகிறது. 
இந்நிலையில், வெளிநாட்டில் உள்ள சரணாலயத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒரு குதிரை, அங்குள்ள இரு மரங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டது.
 
அதைப் பார்த்த, ஊழியர்கள் உடனே அந்த குதிரையை மீட்கு முயற்சியில் ஈடுபட்டனர்.
 
அப்போது, ஊழியர்  ஒருவர் ரம்பம் கொண்டு ஒருமரத்தை சாதுர்யமாக அறுக்கையில், இன்னொருவர் அந்த மரம் குதிரை மீது விழாமல் மரத்த பிடித்து அந்தப் புறம் சாய்த்தார். 
 
மரங்களுக்கு இடையில் இருந்து விடுபட்ட குதிரை சுதந்திரமாக ஓடியது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.