திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 22 ஜூலை 2021 (18:03 IST)

கொரோனாவில் இருந்து மீண்டு அணியில் இணைந்த பண்ட்!

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

இங்கிலாந்தில் இருக்கும் ரிஷப் பண்ட் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மற்றொரு விக்கெட் கீப்பரான விருத்திமான் சஹாவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அதனால் இங்கிலாந்து தொடரில் யார் விக்கெட் கீப்பிங் செய்யப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கே எல் ராகுல் இருப்பதால் அவர் விக்கெட் கீப்பராக நியமிக்கப்படுவார் என சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது சிகிச்சையில் பண்ட் தேறியுள்ளார். இதையடுத்து அவருடன் தனிமைப்படுத்தப் பட்டு இருந்த 4 பேர் அணியோடு இணைந்துள்ளனர்.