திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 22 ஜூலை 2021 (16:55 IST)

நடன இயக்குனரை திருப்பி அனுப்பிய சிவகார்த்திகேயனின் பவுன்சர்ஸ்!

நடிகர் சிவகார்த்திகேயனிடம் வாய்ப்புக் கேட்டு சென்ற போது தன்னை அவர் சந்திக்கவே இல்லை என்று நடன இயக்குனர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் பல வெற்றி பாடல்களுக்கு நடனம் வடிவமைத்துக் கொடுத்தவர் சிவசங்கர். ரஜினி, கமல், அஜித், விக்ரம் மற்றும் தனுஷ் என அனைத்து முன்னணி கதாநாயகர்களும் இவரோடு பணிபுரிந்துள்ளார்கள். ஆனால் சமீபகாலமாக இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

இந்நிலையில் தற்போது உச்சத்தில் இருக்கும் சிவகார்த்திகேயனின் வாய்ப்பு வழங்குமாறு கேட்டுள்ளார். முதலில் வாய்ப்பு வழங்குகிறேன் எனக் கூறினாலும் அடுத்த முறை சந்திக்க சென்ற போது அவரின் பவுன்சர்கள் உள்ளேயே விடாமல் திருப்பி அனுப்பிவிட்டனராம். மேலும் உங்களை உள்ளே அனுப்பினால் எங்கள் வேலையே போய்விடும் எனக் கெஞ்சியதால் தான் திரும்பி வந்துவிட்டதாக சொல்லியுள்ளார்.