செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (13:40 IST)

ஜடேஜாவுக்கு பிடித்த எஸ் பி பி பாட்டு… அஸ்வின் பகிர்ந்த ரகசியம்!

பாடகர் எஸ் பி பி யின் 75 ஆவது பிறந்தநாள் கடந்த நான்காம் தேதி கொண்டாடப்பட்டது.

இந்திய சினிமாவில் சுமார் 30000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியவர் எஸ் பி பி. தான் இறக்கும் வரையிலும் ஓய்வில்லாமல் பாடல்களைப் பாடியவர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் அதில் இருந்து மீண்டு விட்டாலும், நுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் அவரின் மறைவுக்குப் பின்னர் இன்று அவரது 75 ஆவது பிறந்தநாள் கடந்த நான்காம் தேதி கொண்டாடப்பட்டது. அப்போது பலரும் எஸ் பி பியின் நினைவுகளையும்,  அவர்களுக்கு பிடித்த எஸ் பி பி பாடல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரான அஸ்வின் ஜடேஜாவுக்கு பிடித்த எஸ் பி பியின் பாடல் பற்றி கூறியுள்ளார். அதில் ‘நான் உடல்பயிற்சி கூடத்தில் தமிழ் பாடல்களைக் கேட்பேன். அப்போது ஜடேஜா எனது ப்ளே லிஸ்ட்டை பார்த்துவிட்டு, எஸ்பி பியின் எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை பாடல் ரொம்ப பிடிக்கும் எனக் கூறினார்’ என்று தெரிவித்துள்ளார்.