1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (12:57 IST)

நடிகைக்கு தொடையில் முத்தம் கொடுத்த இயக்குனர் ராம்கோபால் வர்மா!

இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது அடுத்த சர்ச்சை திரைப்படமாக டேஞ்சரஸ் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.

இந்திய சினிமாவில் சர்ச்சைக்குப் பெயர் போனவர் ராம் கோபால் வர்மா. சமூக வலைதளங்களில் அவர் பதிவிடும் கருத்துகள் சர்ச்சைய்யாவது வாடிக்கையாகிவிட்டது. இவர் இந்த லாக்டவுனில் வரிசையாக படங்களை இயக்கி தனது ஓடிடி பிளாட்பார்மில் வெளியிட்டு வருகிறார். இவரது படங்கள் எல்லாம் 18+ ஆக இருப்பதால் அனைவரும் பணம் கட்டிப் பார்த்து வருகின்றனர். இதனால் அவரும் தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் இப்போது புதிதாக டேஞ்சரஸ் என்ற புதிய படத்தை இயக்கி முடித்துள்ளார்.

இந்த படம் ஓரினச்சேர்க்கையாளர்களைப் பற்றிய படமாக உருவாகியுள்ளது. இதில் அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி ஆகிய இரு நடிகைகளும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. பி கிரேட் தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலரில் பெரும்பாலான காட்சிகள் கதாநாயகிகள் இருவரின் உடலையும் காட்சிப்படுத்தும் விதமாக உள்ளன. இதனால் டிரைலர் வெளியானதில் இருந்து அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் நடித்துள்ள நடிகை நைனா கங்குலியோடு நெருக்கமாக பழகி வருகிறார். அதையடுத்து அவரின் தொடையில் முத்தமிடும் ஒரு புகைப்படத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அனைவரின் கவனமும் தன் பக்கம் விழும்படி செய்துள்ளார்.