செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (13:33 IST)

அப்ப குரலே எனக்கு மைனஸ் என்றார்கள்… நடிகர் பகிர்ந்த தகவல்!

நடிகர் அர்ஜுன் தாஸ் பலமுறை தனது குரலுக்காகவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கைதி படத்தின் மூலம் மக்கள் மனதில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், அதன் பின்னர் மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.  அதன் பிறகு இவர் நடித்த அந்தகாரம் திரைப்படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. இந்நிலையில் இப்போது ஹீரோவாக நடிக்க சில படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதில் வசந்தபாலன் இயக்கும் படமும் ஒன்று.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் ரசிகர்களுடன் நடந்த ஒரு உரையாடலில் ‘உங்கள் குரலுக்காக எப்போதாவது நிராகரிக்கப்பட்டுள்ளீர்களா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார். அதில் ‘ஆம் நிறைய முறை நடந்துள்ளது. பலரும் எனது குரல்தான் என்னுடைய மைனஸ் என்றார்கள். ஒரு இயக்குனர் கூட அதைக் காரணம் காட்டி என்னை நிராகரித்தார்.’ எனக் கூறியுள்ளார். ஆனால் இப்போது அவரின் தனித்துவமான குரல் மூலம் அவர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.