செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By
Last Modified: திங்கள், 7 ஜூன் 2021 (13:27 IST)

அஜித்தை சந்தித்த பின் என் எண்ண ஓட்டமே மாரிவிட்டது… இயக்குனர் பதில்!

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான் அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார்.

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களின் மூலம் பி கிரேட் இயக்குனர் என்ற இமேஜைக் கொண்டிருந்தார். அதன் பின்னர் ஹெச் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்திருந்தார்.

அதன் பின்னர் இப்போது காதலை தேடி நித்யானந்தா மற்றும் பகீரா ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது அஜித்தை சந்தித்த பின்னர் தனது எண்ண ஓட்டமே மாறிவிட்டதாகக் கூறியுள்ளார். அதன் பிறகு எனது கதை தேர்வு வேறு ஒரு தளத்தில் இருக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.