திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva

ராயல் ராஜஸ்தான் அணி வீரரின் தந்தை கொரோனாவுக்கு பலி!

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் எம்பிக்கள் அமைச்சர்கள் முதல்வர்கள் ஆகியோர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதில் ஒரு சிலருக்கு பலியாகி உள்ளனர் என்பதும் அதிர்ச்சியான செய்தியாகும்
 
இந்த நிலையில் குரலுக்கு கொரோனாவால் கிரிக்கெட் வீரர்களும் அவர்களது குடும்பத்தினரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் சேட்டன் சக்காரியா அவர்களின் தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார்
 
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதனால் கிரிக்கெட் வீரர்கள் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேட்டன் சக்காரியாவின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.