வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 24 ஏப்ரல் 2021 (08:29 IST)

ஐபிஎல் தொடர் முழுவதற்கும் விளையாடமாட்டார்… ராஜஸ்தான் ராயல்ஸுக்கு மேலும் ஒரு இழப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் தொடர் முழுவதும் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் நட்சத்திர வீரர்களில் ஒருவர் ஜோப்ரா ஆர்ச்சர். ஆனால் காயம் காரணமாக அவர் தொடரின் ஆரம்ப போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது அவர் தொடர் முழுவதுமே விளையாட மாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பென் ஸ்டோக்ஸ் விலகியதால் பெரும் பின்னடைவில் அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.