வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 29 ஏப்ரல் 2021 (17:52 IST)

செல்பி மூலம் கம்பேக் புகைப்படம் போட்ட நடிகை!

நடிகை மாளவிகா தனது லேட்டஸ்ட் செல்பி புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

நாயகியாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தும் பெரிய வாய்ப்புகள் கிடைக்காத நடிகையாக இருந்த மாளவிகாவை பிரபலமாக்கியது இரண்டு படங்கள். முதல் படம் திருட்டு பயலே. அந்த படத்தில் கணவனுக்கு தெரியாமல் அவரின் நண்பருடன் கள்ள உறவில் இருப்பவராக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதன் பின்னர் சித்திரம் பேசுதே படத்தில் வாழ மீனுக்கும் பாடலில் ஆடியதன் மூலம் ஒரே நாளில் உலகம பேமஸ் ஆனார்.

அதன் பின்னர் ஒரு பாடலுக்கு ஆடுவது மற்றும் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடிப்பது என பிஸியாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் திருமணம் செய்துகொண்டு சினிமாவை விட்டு விலகினார். இப்போது சமூகவலைதளங்கள் மூலமாக மட்டுமே ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் தனது கவர்ச்சியான செல்பி புகைப்படம் ஒன்றை அவர் சமூகவலைதளத்தில் பகிர மீண்டும் ரசிகர்களின் பார்வையை தன் பக்கம் திருப்பியுள்ளார்.