திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 29 ஏப்ரல் 2021 (18:28 IST)

கொரோனாவில் இருந்து மீண்ட தோனியின் பெற்றோர்!

கொரோனாவில் இருந்து தோனியின்  பெற்றோர் மீண்டு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

சில தினங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெற்றோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் குணமான அவர்கள் இப்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.