வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 ஆகஸ்ட் 2020 (16:56 IST)

ஓய்வுக்குப் பின் தோனியை கட்டிப்பிடித்து அழுத கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான தோனியும் ரெய்னாவும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்து பரபரப்பைக் கிளப்பினர்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி ஓராண்டுக்கு மேலாக ஆன நிலையில் அவரின் எதிர்காலம் என்ன என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதையடுத்து இரு நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் போட்டிகளுக்காக  சென்னையில் பயிற்சி மேற்கொள்வதற்காக ராஞ்சியில் இருந்து தனி விமானத்தில் தோனி சென்னை வந்த தோனி, இன்ஸ்டாகிராமில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதையடுத்து சில மணிநேரங்களிலேயே அவரது நண்பரான ரெய்னாவும் ஓய்வு முடிவை அறிவித்தார். இவ்விருவரும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஓய்வு குறித்து பேசியுள்ள ரெய்னா’ ஓய்வு முடிவை அறிவித்தபின் நானும் தோனியும் கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டு அழுதோம்’ எனக் கூறியுள்ளார்.