வாழ்வின் சாதிக்க தன்னம்பிக்கை உதவும் எனக் காட்டிய தோனி – கமல்ஹாசன் டுவீட்
sinoj|
Last Modified ஞாயிறு, 16 ஆகஸ்ட் 2020 (14:05 IST)
மகேந்திர சிங் தோனி நேற்று, சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.அவரது இந்த முடிவு பலருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, வாழ்க்கையிலும் விளையாட்டிலும் தன்னம்பிக்கையுடன் இருந்து எப்படி சாதிப்பது என்று எனக்கு உணர்த்திய தோனிக்கு
எனது நன்றி.
நீங்கள்சிறு டவுனில் பிறந்து நாட்டின் நாயகனாக உயர்ந்தது வரை அனைவருக்கும் தெரியும். இந்திய அணி உங்களது அமைதியான நடத்தையை இனி தவறவிடும். சென்னை உடனான உங்கள் காதல் தொடரட்டும் என தெரிவித்துள்ளார்.