தொடர்புடைய செய்திகள்
- வீரியமிக்க டெல்டா வகை வைரஸால் இங்கிலாந்தில் 3வது அலை!
- தொடர்ந்து ஒரு லட்சத்திற்கு கீழ் தினசரி பாதிப்பு – இந்தியாவில் கொரோனா
- முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து நிதான ஆட்டம்: டிராவை நோக்கி செல்லும் டெஸ்ட்
- 17.92 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
- புதிய ஐடி சட்டம் குறித்து ஐநாவிடம் விளக்கம் அளித்த இந்தியா!
உலகெ டெஸ்ட் சாம்பியன்ஷிப்… இன்றும் மழையால் தாமதமான போட்டி!
இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா 217 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. விராட்கோலி 44 ரன்களும் ரஹானே 49 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனையடுத்து நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கிய நிலையில் நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. டெவொன் கான்வெ 54 ரன்களும், டாம் லாத்தம் 30 ரன்களும் எடுத்துள்ளார்கள். அஸ்வின் மற்றும் இஷாந்த் சர்மா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர்.
இந்நிலையில் இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்குவது மழையால் தாமதமாகியுள்ளது. ஏற்கனவே முதல்நாள் மழையால் கைவிடப்பட்டு ரிஸர்வ்ட் நாளான 23 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
